பெண்களை அச்சுறுத்தும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை

தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்துதல் தடை (திருத்தச்) சட்டம் 2025 தமிழ்நாடு அரசால் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்துதல் தடை (திருத்தச்) சட்டம் 2025-ன் படி 3 ஆண்டுகள் வரை பாதுகாப்பு ஆணை பெறப்பட்டது.
திருப்பூர் மாநகரக் காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. அதன்படி தமிழ்நாடு அரசால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கு எதிரான சித்திரவதைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 7-C படி நல்லூர் காவல் நிலையத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இதுவரை 8 குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக அவர்கள் வழக்கின் புகார் அளித்தப் பெண்களை எந்த வகையிலும் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதுடன் அவர்களை எந்தவொரு வகையிலும் அச்சுறுத்தும் நோக்கில் செயல்படக்கூடாது என்றும் தவறும் பட்சத்தில் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க நேரிடும் என்று வட்ட நிர்வாக நீதிபதியால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.