பராமரிப்பு பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் தாமதம்


பராமரிப்பு பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் தாமதம்
x

ரெயில்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

மதுரை,

திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ஆலப்புழை மற்றும் ஓசிரா ரெயில் நிலையங்களில் உள்ள பராமரிப்பு பணிமனைகளில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் பல்வேறு ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16344) நேற்று சுமார் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.

குருவாயூரில் இருந்து மதுரை வழியாக நேற்று சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) 2 மணி நேரம் தாமதமாக சென்றது. இந்த ரெயில் விருதுநகரில் இருந்து மதுரை வழியாக செல்வதற்கு பதிலாக அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்பட்டது. மறுமார்க்கத்தில் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) நேற்று 2½ மணி நேரம் தாமதமாக சென்றது. இதன் காரணமாக மேற்கண்ட ரெயில்களின் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

1 More update

Next Story