பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

சென்னையில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் நாளை மறுநாள் (26.12.2025, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கோவூர்: அம்பாள்நகர், ராம்நகர், அண்ணா தெரு, கண்காட்சி தெரு, ஆனந்த விநாயகர் தெரு, குன்றத்தூர் பிரதான சாலை, அம்பேத்கர் தெரு.
பொன்னேரி: பஞ்செட்டி, தச்சூர் கூட் ரோடு, அழிஞ்சிவாக்கம், போராக்ஸ், கீழ்மேனி, பெரவள்ளூர், அத்திப்பேடு, நத்தம், ஆண்டார்குப்பம், சத்திரம், மாதவரம், ஆமூர், கோடூர், கே.பி.கே.நகர், சின்னாவரம், வெள்ளோடை, எலியம்பேடு, சின்னகாவனம், பெரியகாவனம், காவல்பட்டி, உப்பளம், டி.வி.பாடி, வெம்பாக்கம், தேவதானம், அன்னுப்பம்பட்டு, ஏ.ஆர்.பாளையம், ஆலாடு, பெரும்பேடு, டி.வி.புரம்., உத்தண்டி, கண்டிகை, அரசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






