எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி: தென் மாவட்ட ரெயில் சேவையில் மாற்றம்

மறு அறிவிப்பு வரும் வரை குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணிகள் காரணமாக, அங்கிருந்து இயக்கப்பட்டு வந்த சில முக்கிய விரைவு ரெயில்கள் தற்காலிகமாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 10 முதல் நவம்பர் 10, 2025 வரை இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்து இருந்தது. அதன்படி, நவம்பர் 11-ந்தேதிக்கு பிறகு எழும்பூர் ரெயில் நிலையத்தில் வழக்கம் போல ரெயில்கள் இயக்கப்படுமா? என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் ரெயில் சேவையில் மீண்டும் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
* உழவன் எக்ஸ்பிரஸ் நவ. 10 முதல் 29 வரை தஞ்சாவூர் - தாம்பரம் இடையே இயக்கப்படும்
* கொல்லம் - சென்னை அனந்தபுரி அதிவிரைவு ரெயில் நவ.10 முதல் 29 வரை தாம்பரம் வரை இயக்கம்
* ராமேஸ்வரம் - சென்னை சேதுஅதிவிரைவு ரெயில் நவ.10 முதல் 29 வரை தாம்பரம் வரை இயக்கம்
* ராமேஸ்வரத்தில் இரவு 8.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.35 மணிக்கு வரும்
* ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரெயில் நவ. 10 முதல் 29 வரை தாம்பரம் வரை இயக்கம்
* ராமேஸ்வரத்தில் மாலை 17.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.45 மணிக்கு வரும்
* மறு அறிவிப்பு வரும் வரை குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்
* சென்னை எழும்பூர் - மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்
* பராமரிப்பு காரணமாக சென்னை எழும்பூருக்கு ரெயில் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.






