பராமரிப்பு பணி: சென்னையில் 11 மின்சார ரெயில்கள் ரத்து


பராமரிப்பு பணி: சென்னையில் 11 மின்சார ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 7 Sept 2025 7:07 AM IST (Updated: 7 Sept 2025 7:48 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை

சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி பணிமனையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணி முதல் மறுநாள் 8-ந்தேதி அதிகாலை 4 மணி வரையில் (8 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* சென்னை கடற்கரையில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.45, இரவு 8, 9.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று இரவு 7.35, 8.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 7.35, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று இரவு 8.15, 9.25, 10.30 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

* சூலூர்பேட்டையில் இருந்து இன்று இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

சிறப்பு ரெயில்கள்

பயணிகள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6.45, இரவு 9.20 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு மீஞ்சூருக்கும், மீஞ்சூரில் இருந்து இரவு 8.04 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

* மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மீஞ்சூருக்கும், மீஞ்சூரில் இருந்து இரவு 8.44, 9.56 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட்டிற்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

* சூலூர்பேட்டையில் இருந்து இன்று இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டிக்கு சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story