சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு; சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்

பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடமும் மும்பை ஐஐடி 3வது இடம்,டெல்லி ஐஐடி 4வது இடம் பிடித்துள்ளது.
சென்னை,
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலுடன் கூடிய தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு(என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனங்களையும் அதன் கற்றல், கற்பித்தல் வளங்கள், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவுகள், புதுமை நடைமுறை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்து பட்டியலிடப்படுகிறது.
அதன்படி, கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இந்த தரவரிசை பட்டியல் வெளியாகிறது. இதில் ஒட்டுமொத்தம், பல்கலைக்கழகம், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், என்ஜினீயரிங், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடக்கலை, வேளாண்மை, புதுமை, திறந்தநிலை பல்கலைக்கழகம், திறன் பல்கலைக்கழகம், மாநில பொது பல்கலைக்கழகம் என 16 பிரிவுகளின்கீழ் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்படும்.
அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது. அதாவது, கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு முந்தைய 3 ஆண்டுகளில் பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனம் இருந்தது. அந்த பின்னர் தொடர்ந்து 7-வது ஆண்டாக சென்னை ஐ.ஐ.டி.க்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் 6 இடங்களை ஐ.ஐ.டி.க்களே தட்டித் தூக்கியுள்ளன.
1 சென்னை ஐஐடி
2. ஐஐஎஸ் பெங்களூரு
3.ஐஐடி மும்பை
4. ஐஐடி டெல்லி
5.ஐஐடி கான்பூர்
6.ஐஐடி கரக்பூர்
7.ஐஐடி ரூர்க்கி
8. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், டில்லி
9. ஜவஹர்லால் நேரு பல்கலை, டெல்லி,
10.பனாரஸ் ஹிந்து பல்கலை, வாரணாசி
டாப் 10 பல்கலைக்கழகங்கள்
1. இந்திய அறிவியல் மையம், பெங்களூரு
2.ஜவஹர்லால் நேரு பல்கலை, டெல்லி
3.மணிப்பால் உயர் கல்வி அகாடமி, மணிப்பால்
4. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, டெல்லி
5. டெல்லி பல்கலை, டெல்லி
6. பனாரஸ் ஹிந்து பல்கலை, வாரணாசி,
7.பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், பிலானி
8. அமிர்தா விஷ்வா வித்யபீதம், கோவை,
9.ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கோல்கட்டா
10. அலிகார் முஸ்லிம் பல்கலை, அலிகார்
டாப் 10 கல்லூரிகள் பட்டியல்
1.ஹிந்து கல்லூரி, டெல்லி
2.மிராண்டா ஹவுஸ், டெல்லி
3.ஹான்ஸ் ராஜ் கல்லூரி, டெல்லி
4. கிரோரி மால் கல்லூரி, டெல்லி
5.செயின்ட் ஸ்டீபன் கல்லூரி,டெல்லி
6. ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா நூற்றாண்டு கல்லூரி, கோல்கட்டா,
7. ஆத்ம ராம் சனாதன தர்மம் கல்லூரி, டெல்லி
8. சேவியர் கல்லூரி, கோல்கட்டா
9. பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி, கோவை,
10. பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, கோவை,
ஆகிய கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.
* கட்டிடக்கலை பிரிவில் ரூர்கே ஐ.ஐ.டி.யும், சட்டப்பிரிவில் பெங்களூரு தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகமும் முதல் இடத்தில் இருக்கிறது. மருத்துவம் பரிவில் டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் முதல் இடத்தையும், தமிழ்நாட்டில் வேலூர் கிறிஸ்தவ கல்லூரி 3-வது இடத்தையும் பெற்றிருக்கிறது.
* பல் மருத்துவத்தில் டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் முதல் இடத்திலும், சென்னை சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 2-வது இடத்திலும் உள்ளது.
* ஆராய்ச்சி பிரிவில் பெங்களூரு ஐ.ஐ.எஸ். முதல் இடத்தையும், சென்னை ஐ.ஐ.டி. 2-வது இடத்தையும், புதுமை கண்டுபிடிப்புகள் பிரிவில் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 9-வது இடத்தையும் பெற்றிருக்கிறது.
* மாநில பொது பல்கலைக்கழகங்கள் பிரிவில் ஜடவ்பூர் பல்கலைக்கழகம் முதல் இடத்திலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 2-வது இடத்திலும் உள்ளது.
* திறந்தவெளி பல்கலைக்கழகம் பிரிவில் டெல்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகமும், திறன் பல்கலைக்கழகம் பிரிவில் புனே சிம்போசிஸ் திறன் மற்றும் தொழில் பல்கலைக்கழகமும் முதல் இடத்தை பெற்றிருக்கின்றன.