கன்னியாகுமரி: சாலையில் மலைப்பாம்பு செல்வதாக பரவும் வீடியோ - தமிழக அரசு விளக்கம்

சாலையில் ராட்சத பாம்பு ஊர்ந்து செல்வதாகக் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சென்னை,
தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக் குளம் சாலையில் ராட்சத பாம்பு ஊர்ந்து செல்வதாகக் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இது தவறான தகவல்.
இந்தக் காணொளி தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. கடந்த 2022 ஆம் ஆண்டு கேரள மாநிலம் வயநாட்டில் ராட்சத பாம்பு சாலையைக் கடந்து செல்வதாகக் குறிப்பிட்டு இதே காணொளியைத் தனியார் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதை கன்னியாகுமரி என்று திரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள்.
தவறான தகவலை நம்பாதீர்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






