செஞ்சிக் கோட்டை இந்தியாவின் 44-வது அடையாளமாக இடம்பெற்றது சிறப்புமிக்க பெருமை - நயினார் நாகேந்திரன்


செஞ்சிக் கோட்டை இந்தியாவின் 44-வது அடையாளமாக இடம்பெற்றது சிறப்புமிக்க பெருமை - நயினார் நாகேந்திரன்
x

செஞ்சிக் கோட்டையை உலகின் புராதன சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சோழர் காலத்தில் "சிங்கபுரி" எனவும், மராத்திய மாமன்னன் மாவீரன் சத்ரபதி சிவாஜியால் சிறந்த பாதுகாப்பு கோட்டை எனவும், ஆங்கிலேயர்களால் "கிழக்கின் ட்ராய்" எனவும் பெருமையுடன் அழைக்கப்பட்ட நமது விழுப்புரம் செஞ்சிக் கோட்டையை உலகின் புராதன சின்னங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ அமைப்பு.

இந்தியாவின் 44-வது அடையாளமாக மராத்திய மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டைகளுடன் நமது தமிழகத்தைச் சார்ந்த செஞ்சிக் கோட்டையும் இடம்பெற்றுள்ளது நமக்குக் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க பெருமையாகும்.

மூன்று மலைகளை அரணாகக் கொண்ட, மிகப்பெரும் பழமை வாய்ந்த செஞ்சிக் கோட்டை இன்று உலகரங்கில் நமது தமிழரின் பாரம்பரியப் பெருமைக்கு சிறந்த அடையாளமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறது. ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருமகிழ்வில் ஆழ்த்தியுள்ள இச்செய்தியைப் பாகுபாடின்றி கொண்டாடி மகிழ்வோம்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story