தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறை


தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறை
x

வெளிமாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் சட்டவிரோதமாக கொட்டப்படுகின்றன

சென்னை

தமிழகத்தில் அனுமதியின்றி மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. உள்ளூர் மற்றுமின்றி கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் மருத்துவ கழிவுகள் தமிழகத்தில் சட்டவிரோதமாக கொட்டப்படுகின்றன. இது தொடர்பாக பல்வேறு புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.

மருத்துவக்கழிவுகளை முறையற்று குவிப்பது சுற்றுச்சூழலுக்கும், பொது சுகாதாரத்திற்கும் கடும் அபாரத்தை ஏற்படுத்தக்கூடியது. அண்டை மாநிலங்களில் இருந்தும் நமது மாநிலத்தில் உயிரி மருத்துவக்கழிவுகள் கொட்டுவது தொடர்பாக அடிக்கடி புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதை தடுக்கும் வகையில் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது என்று சட்டசபையில் அமைச்சர் ரகுபதி கூறினார்.

கள்ளச்சாராயக்காரர்கள், கணினிவெளிச் சட்ட குற்றவாளிகள், மருந்து சரக்கு குற்றவாளிகள், வனக்குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள் ஆகியோருக்கு மட்டுமே தடுப்புக்காவல் அளிக்கப்பட்ட நிலையில் தற்போது உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டுவோருக்கும் தடுப்புக் காவல் விதிக்கப்படும் என்று சட்டமுன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமுன்வடிவின் படி இனி தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அணடை மாநிலங்களிலிருந்து வந்து தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளை கொட்டினாலோ உயிரி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாக கருதி தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story