தமிழக பாஜக புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை - அண்ணாமலை அறிவிப்பு


தமிழக பாஜக புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை - அண்ணாமலை அறிவிப்பு
x
தினத்தந்தி 4 April 2025 3:34 PM IST (Updated: 4 April 2025 3:35 PM IST)
t-max-icont-min-icon

வக்பு மசோதா இஸ்லாமிய மக்களுக்கு வரப்பிரசாதம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை,

கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தமிழக பாஜக வரவேற்கிறது. நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா நிறைவேறியது வரலாற்று வெற்றிச்சரித்திரம். வக்பு மசோதா ஏழை இஸ்லாமிய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

வக்பு மசோதாவால் அரசாங்க சொத்து நேர்மையான முறையில் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் வக்பு வாரியத்திற்கு சொந்தமாக 39 லட்சம் ஏக்கர் சொத்துகள் உள்ளன. 2013க்கு பிறகு 2025 வக்பு மசோதா நிறைவேறியிருக்கிறது.

தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. புதிய மாநிலத்தலைவர் தேர்வான பிறகு, நிறைய பேசுவோம். அதிமுக நிர்பந்தத்தால் நீங்கள் மாற்றமா என்ற கேள்விக்கு கருத்து கூற விரும்பவில்லை. என்னை பொருத்தவரை பாஜக நன்றாக இருக்க வேண்டும் என்றார்.


Next Story