கள்ளக்காதலியுடன் கணவர் தனிமையில் உல்லாசம்... கண்டித்த மனைவி... அடுத்து நடந்த கொடூரம்

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகர் பி-2 மாற்றுக்குடியிருப்பை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன்(வயது 62). இவரது முதல் மனைவி வீரலட்சுமி, இறந்து விட்டார். எனவே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பத்மாவதி(47) என்பவரை கொளஞ்சியப்பன் 2-வது திருமணம் செய்து கொண்டார்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்த கொளஞ்சியப்பன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றார். தற்போது இந்திரா நகரில் உள்ள துணிக்கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு கொளஞ்சியப்பனுக்கு இந்திராநகர் 2-வது தெருவை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இது பற்றி அறிந்ததும் அதிர்ச்சி அடைந்த பத்மாவதி, கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினார். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டபோது, வீட்டை கள்ளக்காதலிக்கு எழுதி கொடுத்து விடுவேன் என்று கொளஞ்சியப்பன் மிரட்டினார். இது பத்மாவதிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்த கொளஞ்சியப்பன், சாப்பிட்டுவிட்டு தூங்கினார். அதிகாலை 2.15 மணி அளவில் பத்மாவதி திடீரென கண் விழித்தார். அங்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கணவரை பார்த்ததும் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து கொளஞ்சியப்பனின் தலையில் குத்தினார். தலையில் கடப்பாரை துளைத்துச்சென்ற இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மாவதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.