டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு கடினமாக இருந்தது: நிபுணர்கள் கருத்து


டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு கடினமாக இருந்தது:  நிபுணர்கள் கருத்து
x
தினத்தந்தி 12 July 2025 5:30 PM IST (Updated: 12 July 2025 9:03 PM IST)
t-max-icont-min-icon

இளநிலை உதவியாளர், தட்டச்சர் , விஏஓ உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது.

சென்னை,

தமிழக முழுவதும் குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வினை சுமார் 13 லட்சம் பேர் எழுதினார்கள். 4,922 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் நடந்தது. சென்னையில் 316 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது.

கைப்பேசி அல்லது ஏதேனும் மின்னணுக் கருவி, பென்டிரைவ், அறிதிறன் கைக்கடிகாரம் போன்ற நவீன கருவிகளை எடுத்து வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது கருவிகளை வைத்திருப்போர் கண்டறியப்பட்டால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் 314 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. காலை 9.30 மணிக்க்கு தொடங்கிய தேர்வு நண்பகல் 12.30 மணிக்கு நிறைவு பெற்றது.

குரூப் 4 தேர்வின் முடிவுகள் மூன்று மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்தார். இன்று நடைபெற்ற தேர்வு கடினமாக இருந்தாக சில தேர்வர்களும், எளிமையாகவே இருந்தது, கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்து எழுதக்கூடிய கேள்விகள் அதிகம் இருந்ததாக சில தேர்வர்களும் கூறினர்.

இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு சற்று கடினமாகவே அமைந்து இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ், பொது அறிவு கேள்விகள் நீளமாக இருந்தன என்றும் தெரிவித்தனர். குரூப் 4 தேர்வில் விடியல் பயண திட்டம் உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பான கேள்விகளும் இடம் பெற்று இருந்தன.

தேர்வை எழுத 13,89,738 பேர் எழுத விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 2,41,719 பேர் தேர்வை எழுதவில்லை. ஆக 11,48,019 பேர்(82.61 சதவீதம்) தேர்வை ஆர்வமுடன் எழுதி இருக்கிறார்கள். இதன் மூலம் காலியாக உள்ள 3,935 இடங்களுக்கு 11,48,019 பேர் போட்டியிடுகிறார்கள். அதாவது ஒரு இடத்துக்கு 292 பேர் போட்டியிடுகிறார்கள்.

1 More update

Next Story