கனமழை எதிரொலி: செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பு


கனமழை எதிரொலி: செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகளில் நீர் வரத்து அதிகரிப்பு
x

சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. ஆனாலும், சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 400 கன அடியில் இருந்து 1,444 கன அடியாக அதிகரித்துள்ளது.

புழல் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 2200 கன அடியில் இருந்து 4167 கன அடியாக அதிகரித்துள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 289 கன அடியில் இருந்து 1605 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், பூண்டி ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 2100 கன அடியில் இருந்து 2500 கன அடியாக அதிகரித்துள்ளது.

1 More update

Next Story