ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ.70,840க்கு விற்பனை

சென்னையில் ஒரே நாளில் 2வது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்தது.
சென்னை,
தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து பவுன் ரூ.74 ஆயிரத்தை நெருங்கியது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை நேற்று அதிரடியாக சரிந்தது. நேற்று கிராம் ரூ. 265 குறைந்து ரூ.8,750க்கும் பவுன் ரூ.2,360 குறைந்து ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. இதனால் மேலும் குறையலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று காலை மீண்டும் தங்கத்தின் விலை எகிறியது. கிராம் ரூ. 15க்கு உயர்ந்து ரூ. 8,765க்கும் பவுன் ரூ. 120 அதிகரித்து ரூ. 70,120க்கும் விற்பனை ஆனது. சரி மாலை வேலையில் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,சென்னையில் ஒரே நாளில் 2வது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்தது. இன்று காலை சவரனுக்கு ரூ.120 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.720 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.8,855க்கும் சவரன் ரூ.70,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் இருமுறை உயர்த்தப்பட்ட தங்கம் சவரன் ரூ.70,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.