ஓடும் பஸ்சில் பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் நகை, பணம் திருட்டு

கோப்புப்படம்
3 பவுன் தங்க நகை, ரூ.5 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு போனதால் அதிர்ச்சியடைந்தார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி ஆனந்தவல்லி (வயது 45). இவர் மதுரை தெப்பக்குளம் போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் திருப்புவனத்தில் இருந்து மானாமதுரையில் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் ஊருக்கு சென்றார்.
பின்னர் பர்சை ஆனந்தவல்லி பார்த்தபோது திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.5 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






