சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு

சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் பட்டாசு தொழிற்சாலை தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். ஆலையில் உள்ள 5 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story