ஈரோடு- சம்பல்பூர் சிறப்பு ரெயில் நீட்டிப்பு

ஈரோடு- சம்பல்பூர் சிறப்பு நவம்பர் 26-ந்தேதி வரை (புதன்கிழமை தோறும்) நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8.30 மணிக்கு ஈரோடு வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண். 08311), நாளை (புதன்கிழமை) முதல் வரும் நவம்பர் 26-ந்தேதி வரை (புதன்கிழமை தோறும்) நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மறுமார்க்கமாக, ஈரோட்டில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.15 மணிக்கு சம்பல்பூர் செல்லும் சிறப்பு ரெயில் (08312), வரும் 19-ந்தேதி முதல் நவம்பர் 28-ந்தேதி வரை (வெள்ளிக்கிழமை தோறும்) நீட்டிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story