10-ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு

பணிகளுக்கான நேர்காணல் வரும் 8-ந்தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“ஐக்கிய அரபு (துபாய்) அமீரகத்தில் பணிபுரிய 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் ஒருவருட பணி அனுபவத்துடன் 22 முதல் 45 வயதிற்கு உட்பட்ட, Electrician பணிக்கு மாத வருமானம் ரூ.47,250/-, Plumber பணிக்கு ரூ.47,250/-Mason பணிக்கு ரூ.47,250/-,Fitter பணிக்கு ரூ.47,250/-,Painter பணிக்கு ரூ.44,100/-Labour பணிக்கு ரூ.29,900/ -வழங்கப்படும். மேலும் உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்பபடிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் புகைப்படம்(Resume, Qualification Certificate, Experience Certificate, Passport original & copy) & Photo ஆகியவற்றை 07.11. 2025-க்குள் அனுப்பவும்.
இப்பணிகளுக்கான நேர்காணல் 8.11.2025 அன்று காலை 8.00 மணி முதல் நடைபெற உள்ளது. எனவே விருப்பம் உள்ளவர்கள் (Resume, Qualification Certificate, Experience Certificate, Passport original & copy, Aadhar and Photo) ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அனுகவும்:
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருவெறும்பூர்: 620014, திருச்சி மாவட்டம்.
கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) &வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






