கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி 30-ந் தேதி பிரசாரம்


கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி 30-ந் தேதி பிரசாரம்
x

கோபிசெட்டிபாளையம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியாகும். அந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள போவது குறிப்பிடத்தக்கது.

சென்னை

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக கடந்த 7.7.2025 முதல் 10.10.2025 வரை, 174 தொகுதிகளில் தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், கோபிசெட்டிபாளையம், முத்துமஹால் திருமண மண்டபம் அருகில், வருகிற 30-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில், நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கோபிசெட்டிபாளையம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியாகும். இந்த நிலையில், அந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள போவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story