கோவை கோனியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு | Dress code for devotees at Koniamman Temple in Coimbatore


கோவை கோனியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு | Dress code for devotees at Koniamman Temple in Coimbatore
x

கோவை கோனியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கோவை,

கோவையின் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கும் பெரியகடை வீதி கோனியம்மன் கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவில் தேர் திருவிழா மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம்.

இந்த கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு வருகின்ற பக்தர்களில் சிலர் முறையாக ஆடை அணிந்து வருவது இல்லை. இதனால் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து கோவில் நுழைவு வாயில் அருகே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு ஏற்கனவே விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இதுகுறித்த அறிவிப்பு பலகை தற்போது வைக்கப்பட்டு உள்ளது.

இதில் ஆண்கள் வேஷ்டி அல்லது பேண்ட் மற்றும் சட்டை அணிந்து வர வேண்டும் என்றும், பெண்கள் சேலை, தாவணி அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வர வேண்டும் என்று அந்த அறிவிப்பு பலகையில் வைத்து உள்ளோம். மேலும் பக்தர்கள் முறையாக ஆடை கட்டுப்பாட்டை கடை பிடிக்கிறார்களா என கோவில் ஊழியர்கள் கண்காணிப்பார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story