திமுக அறிவும், உழைப்பும் மக்களை வாழவைக்க அல்ல.. வாரிசு அரசியலை ஊக்குவிக்க - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு


திமுக அறிவும், உழைப்பும் மக்களை வாழவைக்க அல்ல.. வாரிசு அரசியலை ஊக்குவிக்க  - ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
x

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மீது இதே மதுரையில் கல் எரிந்து ஆபாசமாக பேசி பயமுறுத்தியது திமுக தான்.

மதுரை

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தனது எக்ஸ்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-

திமுக போல கட்சி நடத்தவும், வெற்றி பெறவும் அறிவு வேண்டும் என முதல்-அமைச்சர் அறைகூவல் விடுக்கிறார். கட்சி நடத்துவதற்கும், வெற்றி பெறுவதற்கும் அக்கறை வேண்டுமா? அறிவு வேண்டுமா? என்று மக்கள் மத்தியில் கேள்விகள் எழந்து வருகிறது.

திமுக பயப்படும் கட்சி அல்ல என அமைச்சர்கள் கூறியுள்ளார்கள் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை திமுக மற்றவர்களை பயமுறுத்தும் கட்சி பயப்படும் கட்சி அல்ல ,முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மீது இதே மதுரையில் கல் எரிந்து ஆபாசமாக பேசி பயமுறுத்தியது திமுக தான். ரத்தம் வந்தபோது அவர்கள் கொடுத்த விளக்கம் திமுக அறிவு எந்த அளவுக்கு இருந்தது என்று மக்களுக்கு தெரியும். ஆனால் அவர் பயப்படாமல் சர்க்காரியா கமிஷன் வாயிலாக நெருக்கடி கொடுத்த போது காலிலே விழுந்து கதறியது .அப்போது திமுகவின் அறிவு எவ்வளவு ஆழ்ந்த அறிவாக இருக்கிறது என்பது தெரியும்.

திமுக உலகம் சுற்றும் வாலிபன் படத்தை தடுத்து புரட்சித்தலைவரை பயமுறுத்தியது. சட்டசபையில் அவர் மீது செருப்பு வீசி பயமுறுத்தியது. விளைவு திமுக ஆட்சியை இழந்து வீட்டுக்குள் 13 ஆண்டுகள் முடங்கி வனவாசம் சென்றது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களை அவமானப்படுத்தி சேலையை இழுத்து அம்மாவை பயமுறுத்துயது இப்படி எல்லாம் செய்தால் அம்மா பயந்து ஓடி விடுவர் என்று நினைத்தார்கள். ஆனால் புரட்சித்தலைவி அம்மா புறநானூற்று இலக்கணத்திலே வீரத்திற்கு மறு பெயராக இருக்கிற அம்மா அவர்கள் பயப்படாமல் திருப்பி அடிக்கவே அய்யோது கொல்றாங்களே, கொல்றாங்களே என்று திமுக தலைவர் அலறியது இந்த நாடு நன்கு அறியும்.

அதேபோல எடப்பாடியாரையும் பயமுறுத்த பார்த்தார்கள். ஆனால் அவர் எந்த பயத்திற்கும் அச்சுறுத்தல், மிரட்டலுக்கும் அஞ்சாத சிங்கமாக எடப்பாடியார் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா வழியில் மக்களுக்குபுதிய நம்பிக்கைஏற்படுத்தி இருக்கிறார்கள்.திமுகவை போல கட்சி நடத்தவும், வெற்றி பெறவும் அறிவு வேண்டும் என்று சொல்லியருக்கிற முதல்-அமைச்சர்

ஆட்சி நடத்துவதற்கு மக்கள் மீது அக்கறை வேண்டும் என்ற இலக்கணத்தையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்களா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது?

திமுகவிற்கு உழைக்க அறிவு தேவை ஆம் சர்க்காரியா கமிஷன், வீராணத்திட்டம் ,பூச்சி மருந்து ஊழல், 2ஜி ஊழல் ஆகியவற்றை நீங்கள் விஞ்ஞான பூர்வமாக கையாண்ட விதத்தை இன்றைக்கும் மக்கள் மறக்கவில்லை.

திமுகவின் அறிவும், உழைப்பும் ஜனநாயகத்தை காப்பாற்றவா நிச்சயமாக இல்லை? இந்த அறிவும் இந்த உழைப்பும் நிச்சயமாக மக்களாட்சியை காப்பாற்றுவதற்காக பயன்படுகிறதா? என்ற கேள்விக்கு பதில் உங்களின் உழைப்பும் அறிவும் மன்னராட்சிக்கு மகுடம் சூட்ட தான் இருக்கிறது.

75 ஆண்டுகால திமுகவில் 25 ஆண்டுகள் தான் மக்கள் பணியாற்றி உள்ளவர்கள் மீதி உள்ள 50 ஆண்டுகள் மக்கள் உங்கள் நிராகரித்து இருக்கிறார்கள். ஏனென்றால் உங்கள் அறிவும், உழைப்பும் எங்களுக்கு தேவையில்லை என்று மக்கள் எண்ணுகிறார்கள்.

இந்த அறிவும், உழைப்பும் நிச்சயமாக மன்னராட்சிக்குத்தான் இருக்கிறது வாரிசு அரசியலுக்குத்தான் மகுடம் சூட்டி இருக்கிறது. அதிமுக 52 ஆண்டுகால வரலாற்று 30 ஆண்டுகள் மக்களுக்காக சேவை செய்தது. இன்றைக்கு மீண்டும் மக்களாட்சிக்கு முகவரி தருகின்ற மக்களாட்சிக்கு உயிர் கொடுக்கும் மகுடமாக எடப்பாடியாரை முதல்-அமைச்சராக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்

2026 சட்டமன்ற தேர்தலில் உறுதியாக இது தாய்த்தமிழ் நாட்டு மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது .உங்கள் ஆட்சியை நிர்வாகத்தால் ஆகவே மன்னராட்சிக்கு முடிவுரை எழுத இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று மகத்தான தீர்ப்பை வழங்குவார்கள் .

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

1 More update

Next Story