திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை நாளை தொடங்குகிறது


திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை நாளை தொடங்குகிறது
x

திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை நாளை தொடங்குகிறது.

திருச்சி,

திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, ஐதராபாத், பெங்களூரு, புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன.

இதில் திருச்சியில் இருந்து ஐதராபாத் வழியாக டெல்லிக்கு விமான சேவை உள்ளது. இதனால் டெல்லி செல்பவர்கள் நீண்ட நேரம் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில் புதுடெல்லிக்கு நேரடி விமானம் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், திருச்சியில் இருந்து புதுடெல்லிக்கு நேரடி விமான சேவையை இன்டிகோ நிறுவனம் நாளை (புதன்கிழமை) முதல் தொடங்க உள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்த விமானம் காலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு டெல்லியை சென்றடையும் என்றும், மீண்டும் புதுடெல்லியில் இருந்து இந்த விமானம் மதியம் 2.10 மணிக்கு புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் திருச்சியில் இருந்து டெல்லிக்கு ரூ.6,785 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story