‘டிட்வா' புயல்: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


‘டிட்வா புயல்: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
x

புயல் 30-ந்தேதி கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் இன்று புயல் உருவாகி உள்ளது. அதற்கு டிட்வா என பெயரிடப்பட்டு உள்ளது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே தற்போது 700 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல், அடுத்த 48 மணிநேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில், வருகிற 30-ந்தேதி கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ‘டிட்வா' புயல் உருவாகி உள்ளதால், நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 4-ம் எண் உள்ளூர் புயல் எச்சரிக்கை கூண்டும், சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் புயல் 2-ம் எண் தொலைதூர புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

1 More update

Next Story