தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? - மேலிட பொறுப்பாளர் அசோக் தன்வார் பதில்

தமிழக மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அசோக் தன்வார் கூறினார்.
சென்னை,
காங்கிரஸ் கட்சிக்கு மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்பட உள்ளது. இதற்காக மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. அசோக் தன்வார் திருப்பூர் வந்தார்.
அவர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அசோக் தன்வார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். பீகார் தேர்தலிலிருந்து தமிழக சட்டமன்ற தேர்தல் முற்றிலும் மாறுபாடானது. தமிழக மக்கள் விழிப்புணர்வு மிக்கவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என்று அசோக் தன்வார் கூறினார்.






