தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்


தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய நிர்வாகக்குழு அறிவிப்பின்படி, தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மீதான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுத்த நிறுத்த கோரி தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தூத்துக்குடி மாநகர செயலாளர், மாநகர மன்ற உறுப்பினர் தனலெட்சுமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும் டாக்டருமான அறம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கரும்பன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பாலமுருகன், பாபு, மாநிலக்குழு உறுப்பினர் ஞானசேகர், கோவில்பட்டி நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம், எட்டயபுரம் நகரச்செயலாளர் சோலையப்பன், எட்டயபுரம் தாலுகா செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story