கோவை: சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த இருவர் கைது


கோவை: சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த இருவர் கைது
x

சிறுமியை சந்தித்து தன்னை காதலிக்கும்படி தொந்தரவு செய்து உள்ளார்.

கோவை,

ஒடிசாவை சேர்ந்த 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் கோவையில் வசித்து வருகிறார். அவருடைய பெற்றோர், கட்டிட வேலை செய்து வருகின்றனர். பெற்றோர் வேலைக்கு சென்றால் வீட்டில் அந்த சிறுமி மட்டும் தனியாக இருப்பது வழக்கம். ஒடிசா பகுதியை சேர்ந்த புளூநாயக் (வயது 25) என்பவரும் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். அவருக்கு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. ஒரு கட்டத்தில் அவர், சிறுமியிடம் காதலிப்பதாக கூறி உள்ளார். அதை அந்த சிறுமி ஏற்க மறுத்து அதுபோன்ற எண்ணத்தில் பேச வில்லை என்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து அவர் அடிக்கடி அந்த சிறுமியை சந்தித்து தன்னை காதலிக்கும்படி தொந்தரவு செய்து உள்ளார். நேற்று முன்தினம் அந்த சிறுமி நடந்து சென்று கொண்டு இருந்தார். அதை பார்த்த புளூ நாயக் தனது நண்பரான 17 வயது சிறுவனுடன் சென்று அந்த சிறுமியை தடுத்து நிறுத்தி தன்னை காதலிக்க வேண்டும் என்று கூறி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இது பற்றி அந்த சிறுமி, தனது தாயிடம் கூறினார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து புளூ நாயக் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

1 More update

Next Story