சென்னை: ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை


சென்னை: ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
x

கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்

சென்னை,

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவர், வேலை முடிந்து கடற்கரையில் இருந்து மின்சார ரெயிலில் திருவொற்றியூர் வந்தார். பின்னர் திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் இறங்கி நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்ம வாலிபர் ஒருவர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த இளம்பெண், வாலிபரை தாக்கியதுடன், கூச்சலிட்டார். சத்தம் கேட்டு சக பயணிகள ஓடிவந்ததால் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம வாலிபரை தேடி வருகின்றனர்


Next Story