சென்னை: ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிகள் முன்பு வாலிபர் செய்த செயல்


சென்னை: ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிகள் முன்பு வாலிபர் செய்த செயல்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 11 Dec 2025 11:48 PM IST (Updated: 12 Dec 2025 10:30 AM IST)
t-max-icont-min-icon

பஸ்சை நிறுத்திய டிரைவர், போதை வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

சென்னை,

சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் இருந்து மாநகர பஸ்(தடம் எண் 73C) அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஐ.சி.எப். காலனியில் கஞ்சா போதையில் பஸ்சில் ஏறிய வாலிபர் ஒருவர், பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவிகள் முன்பு அரை நிர்வாணமாக நடனம் ஆடியதுடன், ஆபாச வார்த்தைகளால் பேசி அநாகரிகமான செயலில் ஈடுபட்டார். இதனால் சக பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் அதிர்ச்சி அடைந்தனர்.

அம்பத்தூர் போலீஸ் நிலையம் அருகே பஸ்சை நிறுத்திய டிரைவர், போதை வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவரது பெயர் ராமச்சந்திரன்(வயது 25) என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story