சென்னை: கட்டிடம் இடிக்கும் பணியின்போது மேற்கூரை சரிந்து விழுந்து 2 பேர் பலி


சென்னை: கட்டிடம் இடிக்கும் பணியின்போது மேற்கூரை சரிந்து விழுந்து 2 பேர் பலி
x

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை

சென்னை மாவட்டம் வெட்டுவாங்கேணி பகுதியில் பழைய கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தை உடைக்கும் பணியில் இன்று தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டனர்.

தொழிலாளர்கள் கட்டிடத்தை உடைத்துக்கொண்டிருந்தபோது இரும்பு சாரத்தால் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் கட்டிடத்தை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலமான ஒடிசாவை சேர்ந்த பாபு மாலிக், சசிகாந்த் மாலிக் ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story