செங்கல்பட்டு: பைக் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் காயார் பகுதியில் பாலமா நகரை சேர்ந்தவர் ஹரிதாஸ், இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மாமியார் வீட்டிற்கு நேற்று இரவு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது திருப்போரூர் அருகே காயார் வனப்பகுதி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அந்த சாலை எதிரே வந்த கார் பைக் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் மற்றொரு இளைய மகன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story