ராணிப்பேட்டை அருகே பைக் மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி

இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை அருகே நவல்பூர் காரை கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்தில் இன்று அதிகாலை ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சொகுசு கார். மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 3 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு ஓடிவந்த அப்பகுதி மக்கள் வாலிபர்கள் 3 பேரையும் மீட்டு வாலாஜாபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வாலிபர்கள் 3 பேரும் ஒருவர் பின் ஒருவராக உயிர் இழந்தனர்.
இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் விபத்தில் உயிர் இழந்தது ராணிப்பேட்டை அருகே காரை பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 20), வேலூர் மாவட்டம் ரங்காபுரம் பகுதியை சேர்ந்த சாஜன் (26), ஆற்காடு பகுதியை சேர்ந்த பாலமுருகன் (19) என தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதையடுத்து கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.






