ஈரோடு மாணிக்கம்பாளையம் பூங்காவில் புதர்கள் அகற்றம்


தினத்தந்தி செய்தி எதிரொலியாக ஈரோடு மாணிக்கம்பாளையம் பூங்காவில் புதர்கள் அகற்றப்பட்டுள்ளன.

ஈரோடு

ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரியம் எல் டைப் பகுதியில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் நடைபயிற்சியும் செய்து வருகிறார்கள். இந்த பூங்கா புதர்மண்டி கிடந்தது. மேலும் சிறுவர்கள் விளையாடும் ஊஞ்சல்களும் உடைந்து கிடந்தது.

இந்த நிலையில் இது தொடர்பான செய்தி 'தினத்தந்தி'யில் படத்துடன் வெளிவந்தது. இதையொட்டி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பூங்காவில் புதர்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் விளையாட்டு உபகரணங்களையும் மாற்றியுள்ளனர். செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story