இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.69 லட்சம் மதிப்புள்ள பீடிஇலை மூட்டைகள் தூத்துக்குடியில் பறிமுதல்


இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.69 லட்சம் மதிப்புள்ள பீடிஇலை மூட்டைகள் தூத்துக்குடியில் பறிமுதல்
x

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடிஇலைகள் கடத்துவதாக கியூ பிரிவு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், ஏட்டு இருதயராஜ்குமார் இசக்கிமுத்து, காவலர் பேச்சிராஜா ஆகியோர் இன்று அதிகாலையில் தூத்துக்குடி, ஸ்டெர்லைட் பைபாஸ் ஜோதிநகர் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது லோடு வேன் மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலைகள் மூட்டைகளில் பதுக்கி வைக்கபட்டிருந்தது தெரியவந்தது. அதை சோதனை செய்ததில் சுமார் 35 கிலோ வீதம் 59 மூட்டைகளில் இருந்து சுமார் 2,000 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டது. இந்த பீடி இலைகளின் மதிப்பு சமார் 69 லட்சம் ஆகும். கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேல் நடவடிக்கைக்காக சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.

1 More update

Next Story