பாஜக மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு நியமனம் ; நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக பாஜக மாநில ஒழுங்கு நடவடிக்கை குழுவை நியமித்து அக்கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், தமிழக பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவராக மாநில துணைத்தலைவர் சக்கரவார்த்ஹி நியமனம் செய்யப்படுகிறார்.
மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு விவரம்:-
குழு தலைவர் - சக்கரவர்த்தி, மாநில துணைத்தலைவர்
குழு உறுப்பினர்கள்:
எஸ்.ஆர்.சேகர் , மாநில பொருளாளர்
திருமலைசாமி , தேசிய பொதுக்குழு உறுப்பினர்
சிவகாமி பரமசிவம் , மாநில செயற்குழு உறுப்பினர்
குப்புராமு , மாநில செயற்குழு உறுப்பினர்
ராஜலட்சுமி , தேசிய பொதுக்குழு உறுப்பினர்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.







