சட்டசபை தேர்தல்: திமுகவுடன் பேச்சு வார்த்தை - குழு அமைத்த காங்கிரஸ்

கோப்புப்படம்
அரசல் புரசலாக வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புவதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணி தொடர்பாக பல்வேறு யூகங்கள் நிலவி வருகின்றன. காங்கிரஸ் கட்சி, தவெக உடன் கூட்டணியில் சேரப்போவதாகவும் யூகங்கள் கிளம்பி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டசபை தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 'ஐந்து உறுப்பினர் குழு' வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன்.
'இந்தியா கூட்டணி' யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






