தூத்துக்குடி மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு


தூத்துக்குடி மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
x

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் சேவைகள் கிடைக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார் என தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசு துறைகளின் சேவைகள், திட்டங்களை, பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டம், வரும் 15ம் தேதி துவங்க உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பின்வரும் இடங்களில் நடைபெறும்.

கிழக்கு மண்டலம்:

15.7.2025 (வார்டுகள்: 21, 22, 23)- ஆனந்தா மஹால், அழகேசபுரம்.

16.7.2025 (வார்டுகள்: 24, 25, 26)- செயின்ட் மேரிஸ் மகளிர் கல்லூரி, பீச் ரோடு.

17.7.2025 (வார்டுகள்: 27, 28, 39)- சத்திரம் தெரு, அறிஞர் அண்ணா மண்டபம்.

18.7.2025 (வார்டுகள்: 29, 38, 41)- அபிநயா திருமண மண்டபம், சிவந்தாகுளம் ரோடு.

22.7.2025 (வார்டுகள்: 40, 46, 47)- சமுதாய கூடம், பாத்திமா நகர்.

மேற்கு மண்டலம்:

23.7.2025 (வார்டுகள்: 15, 16, 17)- லியோ பள்ளி, பி & டி காலனி.

24.7.2025 (வார்டுகள்: 18, 19, 31)- பிஎம்சி மேல்நிலைப்பள்ளி, மில்லர்புரம்.

25.7.2025 (வார்டுகள்: 32, 33, 34)- தங்கம் நடுநிலைப்பள்ளி, அண்ணாநகர் 10வது தெரு.

29.7.2025 (வார்டுகள் 35,37,42) - சிவந்திஆதித்தனார் பள்ளி, தாமோதரநகர்.

30.07.2025 (வார்டுகள்: 30, 36, 44)- மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, டூவிபுரம் 11வது தெரு.

வடக்கு மண்டலம்:

31.7.2025 (வார்டுகள்: 2, 14)- மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அய்யாசாமி காலனி.

1.8.2025 (வார்டுகள்: 11, 12, 3)- ஆர்.சி.பெத்தானி நடுநிலைப்பள்ளி, கந்தசாமிபுரம்.

6.8.2025 (வார்டுகள்: 13, 20, 1)- தங்கம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி, போல்பேட்டை.

7.8.2025 (வார்டுகள்: 4, 5, 10, 9)- செயின்ட் தாம்மஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி, இன்னாசியார்புரம்.

8.8.2025 (வார்டுகள்: 6, 7, 8)- ஆக்சிலியம் மேல்நிலைப்பள்ளி, திரேஸ்புரம்.

தெற்கு மண்டலம்:

12.8.2025 (வார்டுகள்: 43, 45, 48)- காமராஜ் கல்லூரி.

13.8.2025 (வார்டுகள்: 49, 50, 51, 60)- திரு.குடும்பம் நடுநிலைப்பள்ளி, கால்டுவெல் காலனி.

14.8.2025 (வார்டுகள்: 52, 53, 54)- K.T.K. மேல்நிலைப்பள்ளி, முத்தையாபுரம்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் சேவைகள் கிடைக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக உங்களுடன் ஸ்டாலின் என்ற முன்னெடுப்பு தற்போது மேற்சொன்ன நமது மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற இருக்கின்றது. ஆகவே பொதுமக்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story