பாஜக தேசிய இளைஞர் பிரிவு தலைவராகிறாரா அண்ணாமலை?


பாஜக தேசிய இளைஞர் பிரிவு தலைவராகிறாரா அண்ணாமலை?
x
தினத்தந்தி 16 April 2025 12:12 PM IST (Updated: 16 April 2025 12:37 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை,

தமிழகம் உள்பட நாடு முழுவதும் பாஜகவின் உள்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை கிளைத் தலைவர், மண்டல தலைவர், மாவட்ட தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே தமிழக பாஜக மாநில தலைவர் பதவிக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில் பாஜக வின் தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கடந்த 12-ம் தேதி தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து பாஜக தலைவராக கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பாஜக இளைஞர் பிரிவின் தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. பாஜக யுவமோர்ச்சா (BJYM) பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பாஜக யுவமோர்ச்சா தலைவராக கர்நாடக எம்.பி.தேஜஸ்வி சூர்யா பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story