அகில இந்திய காவல் ஜூடோ-கிளஸ்டர் போட்டி: பதக்கம் வென்றவர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் வாழ்த்து

காவல்துறை தலைமை இயக்குநர் பதக்கம் வென்ற வீரர்களை நேரில் அழைத்து வாழ்த்தியும் ஊக்கப்படுத்தியும் பாரட்டினார்.
சென்னை,
காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு காவல் ஜூடோ-கிளாஸ்டர் அணியில் இடம் பெற்ற 103 வீரர்கள், 10-வது அகில இந்திய காவல் ஜூடோ-கிளஸ்டர்-2025 (ஜூடோ, டேக்வாண்டோ. பென்காக்சிலாட் & கராத்தே அணிகள்). போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டிகள் ஜம்மு & காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 08 முதல் 16 அக்டோபர் 2025 வரை நடை பெற்றன. பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில் 4-வெள்ளி பதக்கங்கள் மற்றும் 14-வெண்கல பதக்கங்கள் மொத்தம் 18 பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கும். தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். 24.11.2025 அன்று வெங்கடராமன், காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர், தமிழ்நாடு , பதக்கம் வென்ற வீரர்களை நேரில் அழைத்து வாழ்த்தியும் ஊக்கப்படுத்தியும் பாரட்டினார். இந்நிகழ்ச்சியில் ரா. தினகரன் கூடுதல் காவல்துறை இயக்குநர். செயலாக்கம் / ஜுடோ-கிளஸ்டர் விளையாட்டு குழு அணிகள் சென்னை அவர்களும் கலந்துக்கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






