கேரள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. போட்டி; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள 28 வேட்பாளர்களின் பெயர்களையும் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.
சென்னை.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், கேரள மாநிலத்தில் அடுத்த மாதம் 9 மற்றும் 11-ந் தேதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகின்றனர்.
கேரள மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில் சிறந்த முறையில் தேர்தல் பணிகள் ஆற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டு உள்ளார். மேலும் அதில் அவர், 28 வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்து இருக்கிறார்.
Related Tags :
Next Story






