சென்னைக்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது


சென்னைக்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
x

கஞ்சா யாருக்கு கடத்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக தனிப்படை போராருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சென்ட்ரல் வந்த ரெயில் பயணிகளை கண்காணித்தனர். அப்போது எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த அண்ணாமலை(33) என்பலர் ஆந்திர மாநிலத்தில் இருந்து ரூ.37ஆயிரம் கொடுத்து 5 கிலோ கஞ்சாலை வாங்கி கடத்தி வந்து இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் மீது ஏற்கனவே 19 வழக்குகள் உள்ளது தெரியலந்தது. கஞ்சா யாருக்கு கடத்தப்பட்டது? கஞ்சா விற்பனை கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story