சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர்

தேவாலயத்திற்கு சென்று விட்டு தனது குழந்தையுடன் பெண் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் தெக்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் 27 வயது பெண். இவர் கடந்த மே மாதம் 10-ந் தேதி இரவு அதே பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்று விட்டு தனது குழந்தையுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரான ஜனா (வயது 21) என்பவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை கண்டவுடன் ஜனா அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ஜனாவை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜனா திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






