கொளத்தூருக்கு வந்தாலே தனி எனர்ஜி வந்துவிடும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கொளத்தூருக்கு வந்தாலே தனி எனர்ஜி வந்துவிடும்  - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கொளத்தூர் தொகுதிக்கு மட்டும் 10 நாட்களுக்கு ஒரு முறை வருகிறேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

அனைவருக்கும் அன்பான வணக்கம். கொளத்தூருக்கு வந்தாலே ஒரு எனர்ஜி வந்துவிடும், உற்சாகம் வந்திடும், ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும். மணமக்களை வாழ்த்துகிற விழா நடந்து கொண்டிருக்கிறது. நம்முடைய குடும்பத்தில் ஒரு திருமண நிகழ்வு வந்தால் எப்படி மகிழ்ச்சியுடன் கலந்துகொள்கிறோமோ அதே போல் வந்திருக்கும் அனைவரின் உணர்வுடந்தான் இருக்கிறோம்.

கொளத்துர் என்று சொன்னாலே சாதனை இல்லையென்றால் ஸ்டாலின் என்ற நியாபகம் வரும். ஏராளமான திட்டங்களை இந்த தொகுதியில் நிறைவேற்றி இருக்கிறோம். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதல் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நான் செல்வேன், ஆனால் கொளத்தூருக்கு மட்டும் 10 நாட்களுக்கு ஒரு முறை நான் வந்துவிடுவேன்.

ஒரு நாள் ஓய்வெடுக்கலாம் என நினைத்தால் சேகர்பாபு என்னை விடமாட்டார். ஒரு பட்டியலை அனுப்பி விடுவார். அதில் 10 விழாக்கள் இருக்கும். அதனை கொடுத்தபின் அந்த நிகழ்ச்சிகளுக்கு நான் வந்தால் தான் எனக்கு முழு திருப்தி இருக்கும்.

என்ன தான் பல மாவட்டங்களில், பல நிகழ்ச்சிகளிலும் தரும் வரவேற்பில் வரும் மகிழ்ச்சியை விட கொளத்தூருக்கு வரும்போது நீங்கள் தரும் வரவேற்பு தான் அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளையாக குறிப்பாக ஒரு நல்ல பிள்ளையாக இருக்க விரும்புகிறேன். அப்படித்தான் இருக்கிறேன்.

அமைச்சர்களே பொறாமைப்படும் வகையில் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. கொளத்தூர் தொகுதிக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. அதிக மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. அதிக நூலகங்கள், அதிக மருத்துவமனைகள் உள்ள தொகுதி கொளத்தூர்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story