தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது


தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
x

தூத்துக்குடியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் லாரி புக்கிங் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள அறையில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மடத்தூர்-சோரீஸ்புரம் ரோட்டில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் லாரி புக்கிங் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள அறையில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் அங்கிருந்து 3.8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தூத்துக்குடி வண்ணார் 3வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகசாமி மகன் ஹரிகிருஷ்ணன்(எ) மண்ணென்னை ஹரி (வயது 54) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மடத்தூர், ஈ.பி. காலனி 2வது தெருவைச் சேர்ந்த வேல்சாமி மகன் ரவிக்குமார்(53), வண்ணார் 1வது தெருவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் சந்திரசேகர்(28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து செய்தனர்.

1 More update

Next Story