சண்டே ஸ்பெஷல்: 'டூ இன் ஒன்' குழம்பு மசாலா தயாரிப்பது எப்படி?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் 'டூ இன் ஒன்' குழம்பு மசாலா தயாரிப்பது எப்படி? என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.
இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் ' டூ இன் ஒன்' குழம்பு மசாலா தயாரிப்பது எப்படி? என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். அது என்ன ' டூ இன் ஒன்' குழம்பு மசாலா என்று நீங்கள் கேட்கலாம். சாம்பாருக்கும் இதே மசாலா பொடியை பயன்படுத்தலாம். மற்ற குழம்புகளுக்கும் இந்த மசாலா பொடியை சேர்க்கலாம். அடுத்தடுத்து நாம் சாம்பார், மற்ற குழம்புகள் எப்படி செய்வது? என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம். அதனால், அதற்கு முன்னதாக குழம்பு மசாலா பொடியை தயாரிப்பது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம். அதற்கு தேவையான பொருட்கள் என்னவென்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
மஞ்சள் - 100 கிராம்
மல்லி - 1 கிலோ
வத்தல் - 1 கிலோ
சீரகம் - 100 கிராம்
கடுகு - 100 கிராம்
வெந்தயம் - 100 கிராம்
மிளகு - 100 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
வறுத்த அரிசி - 100 கிராம்
கருவேப்பிலை (நிழலில் காயவைத்தது) - 1 கைப்பிடி
பெருங்காயம் - சிறிய கட்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) - 50 கிராம்
கசகசா - 3 சிட்டிகை
வசம்பு - ஒரு துண்டு
செய்முறை
முதலில் 'டூ இன் ஒன்' குழம்பு மசாலா தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக வாணலியில் போட்டு லேசாக வறுத்து ஆறவைத்துக்கொள்ளவும். பிறகு அருகில் உள்ள மாவு மில்லுக்கு எடுத்து சென்று பட்டுப்போல திரிக்கவும். திரிக்கும்போதே நல்ல மணம் வரும். இந்த மசாலாவுடன் வசம்பு துண்டும் சிறிது சேர்க்கப்பட்டு இருப்பதால் வண்டு எதுவும் வராது. நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். பொடியை அப்படியே ஆறவைத்து ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் காற்று புகாத அளவுக்கு அடைத்து வைத்துக்கொள்ளவும். ஈர கைகளையும் மசாலாவுக்குள் விட வேண்டாம். ஒவ்வொரு முறை எடுக்கும்போதும் சிறிய ஸ்பூனை பயன்படுத்தவும். தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்த வாரம் இதே மசாலா பொடியை கொண்டு சாம்பார் எப்படி செய்வது? என்பதை பற்றி பார்க்கலாம்.






