தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகள் பற்றிய விரிவான விவரங்கள்

இந்தப் பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வியாக பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (TAMIL NADU NATIONAL LAW UNIVERSITY)
தமிழ்நாட்டில் திருச்சியில் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ( TAMIL NADU NATIONAL LAW UNIVERSITY) 2012 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. திருச்சியின் தென்மேற்கு பகுதியில் திருச்சி - திண்டுக்கல் - தேனி தேசிய நெடுஞ்சாலையில் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.
உலக தரத்தில் சட்டக்கல்வியை வழங்குவதற்காக சுமார் 25 ஏக்கர் பரப்பில் இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான கட்டிட வசதிகள் கொண்டுள்ள இந்த பல்கலைக்கழகம், மாணவ மாணவிகள் தங்கிப் படிப்பதற்கு தேவையான சிறந்த விடுதி வசதிகளையும் வழங்குகிறது
சட்டப்படிப்புகள்
இந்தப் பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வியாக பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன..
பட்டப்படிப்புகள்
இங்கு பட்டப்படிப்புகளாக
1. பி .ஏ, எல். எல் .பி. (ஹானர்ஸ்) ( B.A , L.L.B.).(Hons)
2. பி.காம் எல்.எல்.பி (ஹானர்ஸ்) (B.Com ,L.L.B.) .(Hons)
ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த இரண்டு படிப்புகளும் முழு நேர படிப்பாகும். செமஸ்டர் முறையில் இந்தப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.மொத்தம் பத்து செமஸ்டர்கள் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
வழக்கமான பாடங்களோடு அனுபவ அறிவை பெறுவதற்கு வசதியாக
1. RESEARCH PROJECTS
2. MOOT COURT EXERCISES
3. INTER DISCIPLINARY LECTURES
4. COMPULSORY INTERNSHIP
ஆகிய பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
5 ஆண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.எல்.எல்.பி (ஹானர்ஸ்) (5 YEARS INTEGRATED B.A.,L.L.B.(Hons)
இந்த 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி. ஏ .,எல். எல். பி (ஹானர்ஸ்) படிப்பு, சட்டக் கல்வியோடு இணைந்து சமூக அறிவியல் பாடங்களையும் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக உருவாக்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டு முதல் இந்த படிப்பு இங்கு நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் முதல் இரண்டு ஆண்டுகள் சமூக அறிவியல் தொடர்புள்ள சட்ட கல்வி கற்பிக்கப்படுகிறது. இதன்மூலம் சமூகம் தொடர்புள்ள பல்வேறு அறிவியல் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும், சட்டங்களை தெரிந்து கொள்ளவும் முடியும்.
இவை தவிர சில முக்கிய சட்டப்பாடங்களை கருத்தரங்குகள் மூலமாகவும் கற்பிக்கப்படுகிறது. அக்கவுண்டன்சி, வணிகவியல் போன்ற பாடங்களும் இந்த படிப்பில் இடம்பெறுகிறது.
5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.காம்,எல்.எல்.பி (ஹானர்ஸ்) (5 YEARS INTEGRATED B.Com.,L.L.B.(Hons)
2013 ஆம் ஆண்டு இந்த படிப்பு தொடங்கப்பட்டது. சட்டக் கல்வியோடு மாணவ, மாணவிகளின் அறிவை பெருக்கும் விதத்தில் வணிகவியல், அக்கவுண்டன்சி மற்றும் வணிகம் சம்பந்தப்பட்ட பல்வேறு பாடங்களையும் இணைத்து இந்த படிப்பு நடத்தப்படுகிறது.
சட்ட வரலாறு, அரசியல் அறிவியல், பொருளாதாரம் மற்றும் சமூகவியல் பாடங்களையும் இந்த பட்டப் படிப்போடு சேர்த்து கற்றுத் தரப்படுகிறது.
மாணவர் சேர்க்கை
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் படிப்புகளில் சேர்வதற்கு கண்டிப்பாக "காமன் லா அட்மிஷன் டெஸ்ட்" (COMMON LAW ADMISSION TEST) ( CLAT) என்னும் நுழைவு தேர்வை எழுத வேண்டும்.
பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுதலாம். ஆனால் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும். இந்த தேர்வை எழுத அவர்கள்அனுமதிக்கப்படுவார்கள்.
2026 ஆம் கல்வி ஆண்டில் இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் 2026 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும்"காமன் லா அட்மிஷன் டெஸ்ட்"( CLAT - 2026) என்னும் தேர்வை எழுத வேண்டும்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்கும்போது வரவில்லை என்றாலும் இவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இருந்த போதும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் விவரத்தை பல்கலைக்கழகத்தில் சேரும்போது கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உலக அளவில் அல்லது தேசிய அளவில் அல்லது மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர்கள் பிளஸ் 2 தேர்ச்சி சான்றிதழோடு, CLAT தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் சமர்ப்பித்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கலாம்.
இதைப்போலவே, தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. முன்னாள் ராணுவத்தினரின் மகன் அல்லது மகளுக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க இட ஒதுக்கீடு உண்டு.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
மொத்த இடங்கள்
2026 2027 ஆம் கல்வி ஆண்டில் மொத்தம் 120 மாணவ மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதாவது பி.ஏ,எல், எல், பி (ஹானர்ஸ்) படிப்பில் 60 மாணவ மாணவிகளும், பி.காம் எல்.எல்.பி (ஹானர்ஸ்) படிப்பில் 60 மாணவ மாணவிகளும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
பட்டம் மேற்படிப்பு (POST GRADUATE PROGRAMME )
போஸ்ட் கிராஜுவேட் லீகல் ஸ்டடிஸ் (POST GRADUATE LEGAL STUDIES)
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 2018 _ 2019 ஆம் கல்வி ஆண்டு முதல் "தி சென்டர் பார் போஸ்ட் கிராஜுவேட் லீகல் ஸ்டடிஸ் "(THE CENTER FOR POST GRADUATE LEGAL STUDIES) என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது இந்த அமைப்பு தற்போது, "ஓராண்டு எல்.எல்.எம் இன் பிசினஸ் லா" ( ONE YEAR LLM IN BUSINESS LAW) என்னும் படிப்பை நடத்தப்படுகிறது.
இந்த படிப்பில் சேர மூன்று ஆண்டு அல்லது ஐந்து ஆண்டு பி.எல் படிப்பில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது பி .எல் (ஹானர்ஸ்) அல்லது எல்.எல்.பி (ஹானர்ஸ்) ஆகிய ஏதேனும் ஒரு படிப்பில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
பி. ஏ .எல். எல். பி ( ஹானர்ஸ்) அல்லது பி. காம் ,எல். எல். பி (ஹானர்ஸ்)
பட்டப்படிப்பில் வெற்றி பெற்றவர்களும் இந்த படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.
இந்த படிப்பில் சேர, சட்ட பட்டப்படிப்பில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும். இருந்தபோதும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும்.
ஆராய்ச்சி மையங்கள்
ஆசிரியர்களின் ஆராய்ச்சி திறனை அதிகரிக்கும் விதத்தில்,தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் “கீழ்கண்ட ஆராய்ச்சி மையங்களை நிறுவியுள்ளது
1.Centre for Access to Justice
2.Centre for Competition Law
3.Centre for Investment Laws
4.Centre for Law and Agriculture
5.Centre for Research and Writing
6.Centre for Studies in Alternative Dispute Resolution
7.Centre for Studies in Environmental and Natural Resources Laws
8.Centre for Studies in Victimology
9.Centre for Study and Advocacy of Human Rights
10.Centre for Labour and Development Studies
11.Legal Centre for History of South India
12.Legal Centre for Women's Welfare
13.Centre for Research, Development and Training in Cyber Laws and Cyber
Security
14.Centre for Business and Human Rights
15.Centre for IPR Studies
பயிற்சிகள் மற்றும் வேலை வழங்கும் நிறுவனங்கள்
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு தேவையான சட்ட பயிற்சிகளை கீழ்கண்ட நிறுவனங்கள் வழங்குகின்றன. மேலும் இந்த நிறுவனங்கள் தகுதி வாய்ந்த திறமையான நபர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வழங்குகின்றன
• A K Mylsamy Legal
• Acuity Law LLP
• Adukia Law Chambers
• Advocate Ms. HemaSrinivisan
• Adv. Nangavaram Rajah
• Adv Ms Poongkhulali (Madras High Court)
• Ajay Justice Shaw (Supreme Court and
• Delhi High Court)
• AK Law Chambers
• AKR and Associates
• ALG India Law Offices LLP
• Altacit Global
• Antrix Corporation Ltd.
• AZB & Partners
• Capstone Legal
• Commercial Law Advisors
• Cyril AmarchandMangaldas
• DSK Legal
• Dua Associates Solicitors and
• Advocates
• GiridharanPadmanabhan
• (Madras High
• Court)
• Holla Associates
• ITC Limited
• IndusLaw
• Intaxx Associates
• Intellect Design
• Iyer and Thomas
• JSagar Associates
• Karthik Law Chambers, Chennai
• Karur Vysya Bank
• Keystone
• Khaitan& Co
• KP & Associates
• Lakshmikumaran&Sridharan
• Attorneys
• Legacy Law Offices
• Link Legal
• Luthra&Luthra
• ManilalKher Ambalal & Co
• M2K Advisors
• Niti Bodh
• P Wilson and Associates
• Phoenix Legal
• PSA legal
• Rab&Rab Associates LLP
• Rahul M Shankhar, Advocate
• S&R Associates Partners
• Sarvada Legal
• Senior Advocate C. Arul Vadivelu
• handMangaldas& Co
• Singh and Associates
• Spice Route LegalSenior Advocate MahalakshmiPavani
• (Supreme Court)
• Senior Advocate NL Rajah
• (Madras High Court)
• ShardulAmarc
• Sricharan and Gowtham Law Chambers
• TalwarThakore& Associates
• Tatva Legal
• TLGS Consulting Group
• Trilegal
• Varahe Analytics
• Zeus Law, Delhi
மேலும் விவரங்களுக்கு:
தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் சேர விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
TAMIL NADU NATIONAL LAW UNIVERSITY
NAVALURKUTTAPATTU,
DINDIGUL MAIN ROAD,
TNNLU (Post)
TIRUCHIRAPPALLI –620027, TAMIL NADU, INDIA
WEBSITE: www.tnnlu.ac.இந்த






