மது போதையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய இளம் பெண்; கோபத்தில் கணவர் செய்த செயல்

வெளியில் சென்ற மனைவி குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள ராம்கார் பகுதியை சேர்ந்தவர் உபேந்திர பர்ஹியா (25). இவரது மனைவி ஷில்பி தேவி (22). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் உபேந்திரா தனது வீட்டில் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது வெளியில் சென்ற மனைவி ஷில்பியும் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த உபேந்திரா, குடிபோதையில் வீடு திரும்பியது குறித்து மனைவியிடம் கேள்வி எழுப்பினார். அப்போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் கடும் கோபமடைந்த உபேந்திரா மனைவியை தாக்கியுள்ளார்.
மேலும் அவரை தூக்கி வேகமாக கீழே தரையில் போட்டுள்ளார். இதில் தலையில் காயம் அடைந்த ஷில்பி தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உபேந்திராவை கைது செய்தனர். ஷில்பி தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






