பெங்களூரு ரேபிடோ ஓட்டுநரின் செயலால் நெகிழ்ந்த இளம்பெண்

நள்ளிரவில் பைக் பழுதாகியும் பெண் பயணியை வீட்டில் பத்திரமாக இறக்கிவிட்டு சென்றுள்ளார் ரேபிடோ ஓட்டுநர்.
பெங்களூரு:
நவீன யுகத்தில் தொழில்நுட்பம் நம்மை சக மனிதனிடம் உரையாடுவதைக் குறைத்திருக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இது.
மொபைலில் 6 சதவீதம் பேட்டரியுடன் நள்ளிரவு 12 மணியளவில் சென்று கொண்டிருந்த ரேபிடோ பைக் பழுதாக, அதனை சரிசெய்து இளம்பெண் பயணியை பத்திரமாக வீட்டில் இறக்கிவிட்ட ஓட்டுநர் மானே. பைக் பழுதானதும் வேறு பைக் புக் செய்யச் சொல்லாமல், கவலைப்படாதே.. உன்னை வீட்டில் இறக்கி விடுகிறேன் என அவர் தெரிவித்தது நெகிழ்ச்சியாக இருந்தது என இன்ஸ்டாவில் வீடியோவோடு பதிவு செய்துள்ளார் அந்த இளம்பெண்.
இந்த ஓட்டுநர் தனது கடமையைத் தாண்டி, மனிதனாக ஒரு பெண்ணிற்கு உதவ வேண்டும் என்ற உன்னத நோக்குடன் செயல்பட்டது, இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் மனித உறவுகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது. தன்னுடைய பாதுகாப்பை உறுதி செய்ய காட்டிய அக்கறை, அந்தப் பெண்ணின் மனதில் பெரிய நம்பிக்கையையும், ஆறுதலையும் ஏற்படுத்தியது.






