தேஜ்பிரதாப் யாதவுக்கு ஓய் பிளஸ் பாதுகாப்பு


தேஜ்பிரதாப் யாதவுக்கு ஓய் பிளஸ் பாதுகாப்பு
x

தேஜ் பிரதாப் யாதவின் சகோதர ரான தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் ஆவார்.

பாட்னா,

ராஷ்டீரிய ஜனதாதள நிறுவனர் லல்லு பிரசாத் யாதவின் மகன்களில் ஒருவர் தேஜ்பிரதாப் யாதவ். இவர் கடந்த மே மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் ஜனசக்தி ஜனதாதளம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார்.

பீகார் தேர்தலில் அவர் மகுவா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கிடையே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தேஜ்பிரதாப் யாதவ் அச்சம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. பீகார் தேர்தல் பிரசாரம் இன்று முடிவடைந்த நிலையில் அவருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேஜ் பிரதாப் யாதவின் சகோதர ரான தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் ஆவார்.

1 More update

Next Story