கர்ப்பமாக இருந்த கள்ளக்காதலியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை


கர்ப்பமாக இருந்த கள்ளக்காதலியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை
x

கர்ப்பமாக இருந்த கள்ளக்காதலியை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம், நிலம்பூரை சேர்ந்தவர் பிரபீஷ் (வயது37), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உண்டு. இந்தநிலையில் பிரபீஷ்க்கும் அனிதா (32) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. அனிதாவின் கணவர் ஏற்கனவே பிரிந்து சென்றதால் அவர் தனது 2 குழந்தைகளுடன் பாலக்காட்டில் தனியாக வாழ்ந்து வந்தார்.

இதையடுத்து பிரபீஷ் அடிக்கடி அனிதாவின் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்தார். இதில் அனிதா கர்ப்பமானார். இதனால் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபீஷை வற்புறுத்தினார். அதேநேரத்தில் பிரபீஷ் அவரை ரகசியமாக விலக்கிவிட முடிவு செய்தார். ஆனால் முடியவில்லை. இதனால் பிரபீஷ் தனது மற்றொரு கள்ளக்காதலியான ஆலப்புழை கைநகரியை சேர்ந்த ரஜனி (38) என்பவருடன் சேர்ந்து அனிதாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார்,

அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந்தேதி பிரபீஷ் அனிதாவை ஆலப்புழையில் உள்ள ரஜனியின் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து ரஜனி, அனிதாவின் வாயை பொத்திக்கொள்ள பிரபீஷ் அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கினார். இதில் அனிதா மயக்கமடைந்தார். அவர் இறந்து விட்டதாக கருதி இருவரும் சேர்ந்து அருகில் இருந்த ஆற்றில் வீசி விட்டு சென்றனர்.

ஆற்றில் வீசப்பட்ட அனிதா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த வழக்கில் பிரபீஷ், ரஜனி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளியான பிரபீஷ்க்கு ஆலப்புழை கூடுதல் மாவட்ட சென்ஸ் கோர்ட்டு நேற்று தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் 2-வது குற்றவாளியான ரஜனி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஒடிசா சிறையில் உள்ளதால் அவருக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கோர்ட்டு அறிவித்து உள்ளது.

1 More update

Next Story