வக்பு சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது- பினராயி விஜயன் தாக்கு


வக்பு சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது-  பினராயி விஜயன் தாக்கு
x
தினத்தந்தி 17 April 2025 1:48 PM IST (Updated: 17 April 2025 2:19 PM IST)
t-max-icont-min-icon

வக்பு சட்டத்தின் மூலம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறது என்று பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கேரள முதல் மந்திரி பினராயி விஜயனும் வக்பு சட்டம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருக்கிறார். இது தொடர்பாக பினராயி விஜயன் கூறியிருப்பதாவது-

வக்பு திருத்த சட்டம் அரசியலமைப்பின் பிரிவு 26- ஐ மீறுகிறது. சிலர் இதில் எவ்வாறு குழப்பத்தை உண்டாக்கி, ஆதாயமும் பெறலாம் என்று நினைக்கின்றனர். அதாவது குட்டையைக் குழப்பி மீன்பிடிப்பது எனச் சொல்வது போல ஆர்எஸ்எஸின் மிக முக்கியமான செயல்திட்டம் பாஜகவிடம் உள்ளது. வக்பு சட்டத்தின் மூலம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறது

மத்திய மந்திரி கிரண் ரிஜிஜுவை இங்கே அழைத்து வந்து பேச வைத்தது அதை அரசியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்வதற்கான முயற்சியாகும். வக்பு திருத்தச் சட்டத்தாலும் முனம்பம் மக்களுக்கு நீதி கிடைக்காது என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பிரச்சினையைத் தீர்க்க சுப்ரீம் கோர்ட்டில் போராட்டம் நடத்த வேண்டும் முனம்பம் மக்களின் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் மிக நீண்ட காலமாக அங்கே வசித்து வருகிறார்கள். அங்குள்ள முக்கியமான பிரச்சினை மக்கள் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை. நீண்டகாலமாக அங்கே வசித்து வருவதால் அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு முன்னுரிமை அளித்தது. அவர்களின் பிரச்சினைகளை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

1 More update

Next Story